கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த 12ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்த பகுதி முஸ்லீம்கள் நிறைந்த பகுதியாக இருப்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன் . சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு 'இந்து' மற்றும் அவர் பெயர் நாதுராம் கோட்செ என தெரிவித்தார். இந்நிலையில் கமலின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gayathri_0.jpg)
இந்நிலையில் தமிழ் திரையுலகில் நடிகையான் காயத்ரி ரகுராம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. “வேறொரு மதத்தினர் வசிக்கும் பகுதியில், இந்து மதத்தைக் குறிப்பிட்டு அவர் பேசியது ஏன்? இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தானே... தீவிரமானவர்தானே? இந்துக்களுக்கு கமல்ஹாசன் தீவிரவாதியா, பயங்கரவாதியா?. தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தைகள் முட்டாள்தனமானது” என்றார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதலாம் சீசனில் காயத்ரி ரகுராம் ஒரு போட்டியாளர் ஆவார். காயத்ரி ரகுராம் சமீபத்தில்தான் பாஜகவிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)